108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்


108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்
x
தினத்தந்தி 30 April 2022 12:39 AM IST (Updated: 30 April 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்தது.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பவித்ரன் மனைவி முத்துமணி (வயது 21). கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த போது பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து முத்துமணியை குடும்பத்தினர் மீட்டு பிரசவத்திற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். அப்போது வாலிகண்டபுரம் அருகே சென்ற போது முத்துமணிக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் டிரைவர் ராஜா ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். முத்துமணிக்கு ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் சந்திரசேகர் பிரசவம் பார்த்தார். அப்போது முத்துமணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து முத்துமணி குழந்தையுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தாய்-சேயும் நலமாக இருக்கின்றனர்.

Next Story