108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் வந்த வேன் கவிழ்ந்து ஒருவர் பலி; 10 பேர் காயம்

108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் வந்த வேன் கவிழ்ந்து ஒருவர் பலி; 10 பேர் காயம்
x
தினத்தந்தி 29 April 2022 7:17 PM GMT (Updated: 2022-04-30T00:47:45+05:30)

விருதுநகர் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் வந்த வேன் கவிழ்ந்து ஒருவர் பலியானார். 10 பேர் படுகாயம் அடைந்தனர். திருச்சி போராட்டத்துக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர், 
விருதுநகர் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் வந்த வேன் கவிழ்ந்து ஒருவர் பலியானார். 10 பேர் படுகாயம் அடைந்தனர். திருச்சி போராட்டத்துக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேன் கவிழ்ந்தது 
தூத்துக்குடியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். இந்த வேன் நேற்று காலை 6 மணி அளவில் விருதுநகர்-சாத்தூர் இடையே கோவில்புலிக்குத்தி கிராம விலக்கு அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அந்த வேன்  கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த வல்லநாட்டை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் பட்டு ராஜா (வயது 28), முகைதீன் (32), பிரசாத் (37), செல்லச்சாமி (70), வேன் டிரைவர் ஆசைத்தம்பி  (30) உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஊழியர் சாவு 
இதில் பட்டு ராஜா உள்பட 7 பேர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியிலும், 4 பேர் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பட்டுராஜா பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story