இப்தார் விருந்து நிகழ்ச்சி
தொண்டியில், இந்து தர்ம பரிபாலன சபை சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
தொண்டி,
தொண்டியில் இந்து தர்ம பரிபாலன சபையின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, தூய சிந்தாத்திரை மாதா ஆலய பங்குத்தந்தை சவரிமுத்து, இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜசேகர் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.இதில் அனைவருக்கும் இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. இதில் திருவாடானை வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் பொறியாளர் அபுபக்கர், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ஆனந்தன், இந்து தர்ம பரிபாலன சபை துணைத்தலைவர் ராஜா, தொண்டி பேரூராட்சி அனைத்து ஜமாத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story