கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ஆண்டிமடம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டிமடம் ஒன்றிய பொறுப்பாளர் கவர்னர் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் வடிவேல், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜா பெரியசாமி, ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆண்டிமடம்-விளந்தை அண்ணா சிலையில் இருந்து மனு கொடுக்கும் ஊர்வலம் தொடங்கி கடைவீதி மற்றும் விருத்தாச்சலம் சாலை வழியாக ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்ட துணைச் செயலாளர் ராமநாதன், ஜெயங்கொண்டம் ஒன்றிய பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிமடத்திற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் அமைக்க வேண்டும். தீயணைப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆண்டிமடம் வட்டாட்சியர் கண்ணனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
Related Tags :
Next Story