ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதம்
என்ஜின் பழுது காரணமாக ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ெரயில் 2 மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது. நீண்ட நேரமாக சிவகங்கை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.
சிவகங்கை,
என்ஜின் பழுது காரணமாக ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ெரயில் 2 மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது. நீண்ட நேரமாக சிவகங்கை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.
என்ஜின் பழுது
ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று செல்கிறது. இந்த ரெயில் தினசரி ராமேசுவரத்தில் இருந்து சிவகங்கைக்கு இரவு 7.50 மணிக்கு வரும்.நேற்று வழக்கம் போல் இந்த ரெயில் இரவு 8.07 மணிக்கு சிவகங்கை ரெயில் நிலையம் அருகில் வரும் பொழுது ரெயில் என்ஜின் பழுதாகி நின்று விட்டது.
இதை தொடர்ந்து ரெயில் என்ஜின் டிரைவர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி ரெயிலை மெதுவாக இயக்கி சிவகங்கை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
2 மணி நேரம் தாமதம்
பின்னர் இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காரைக்குடியில் இருந்து மாற்று ெரயில் என்ஜின் கொண்டு வரப்பட்டு: ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டன. அதன் பின்னர் சென்னைக்கு இரவு 9.50 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் சிவகங்கை ரெயில் நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது. என்ஜின் பழுதால் ெரயில் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story