இந்திய வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு


இந்திய வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 29 April 2022 7:34 PM GMT (Updated: 2022-04-30T01:04:05+05:30)

இந்திய வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

பெரம்பலூர்
இளைஞர்களுக்கு வேலை கொடு, பொதுத்துறையை தனியாருக்கு விற்காதே என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை, கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி ஆகிய நான்கு முனைகளில் இருந்து திருச்சி மாநகர் நோக்கி சைக்கிள் பயணம் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக இன்று (சனிக்கிழமை) சென்னையில் இருந்து சங்கத்தின் மாநில செயலாளர் பாலா தலைமையிலான சைக்கிள் பயண குழு பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. அவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட குழு சார்பில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் வரவேற்பும், அதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரசாரமும் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் சைக்கிள் பயணத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து, அதற்கான அறிவிப்பு ஆணையை துறைமங்கலத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் நோட்டீஸ் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story