100 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம்


100 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம்
x
தினத்தந்தி 30 April 2022 1:14 AM IST (Updated: 30 April 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி சமத்துவபுரத்தில் குடியிருந்து வரும் 100 பயனாளிகளுக்கு தங்களது வீடுகளை பராமரிப்பு செய்ய தலா ரூ.50 ஆயிரத்தை யூனியன் துணைத்தலைவர் வழங்கினார்.

சிவகாசி, 
சிவகாசி சமத்துவபுரத்தில் குடியிருந்து வரும் 100 பயனாளிகளுக்கு தங்களது வீடுகளை பராமரிப்பு செய்ய தலா ரூ.50 ஆயிரத்தை யூனியன் துணைத்தலைவர் வழங்கினார்.
சமத்துவபுரம்
சிவகாசி அருகே உள்ள ஆனையூர் கிராமத்தில் கடந்த 1999-ம் ஆண்டு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இங்கு பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த 100 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் பழுதடைந்து காணப்பட்டது. 
இந்த நிலையில் சமத்துவபுரத்தில் உள்ள அனைத்து வீடுகளும் பராமரித்து வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
100 பேர்
இந்தநிலையில் சிவகாசி ஆனையூரில் உள்ள சமத்துவபுரத்தில் குடியிருந்து வரும் 100 பயனாளிகளுக்கு அவர்களின் வீடுகளை பராமரித்துக்கொள்ள வசதியாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி சமத்துவபுரத்தில் நடைபெற்றது.
 இதில் சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், ஆனையூர் பஞ்சாயத்து தலைவர் லயன் லட்சுமி நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு, தி.மு.க. நிர்வாகிகள் பிரவீன், திலிபன்மஞ்சுநாத், வைரமணி, சமூக ஆர்வலர் தங்கபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு அவர்களின் வீடுகளை பராமரித்துக்கொள்ள உரிய ஆணைகளை பெற்றுச்சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் நாகராஜன் செய்திருந்தார்.

Next Story