குமரியில் 2,200 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது


குமரியில்  2,200 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 29 April 2022 8:03 PM GMT (Updated: 29 April 2022 8:03 PM GMT)

2,200 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது

நாகர்கோவில், 
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவலை தடுக்கும் வகையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தடுப்பூசி போடும் பணிகளையும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி குமரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 550 மருத்துவக்குழுக்கள் மூலம் 2,200 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனை பயன்படுத்தி முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்கள் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும். இதில் 3-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
முன்னதாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்துவது குறித்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) பிரகலாதன், சுகாதார துணை இயக்குனர் மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story