சொத்தவிளை அருகே கடற்கரையில் 5 அடி உயர சாமி சிலை கரை ஒதுங்கியது


சொத்தவிளை அருகே  கடற்கரையில் 5 அடி உயர சாமி சிலை கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 29 April 2022 8:11 PM GMT (Updated: 2022-04-30T01:41:06+05:30)

சொத்தவிளை அருகே கடற்கரையில் 5 அடி உயர சாமி சிலை கரை ஒதுங்கியது

மேலகிருஷ்ணன்புதூர், 
சொத்தவிளை அருகே உள்ள பள்ளம்துறை ஆராட்டுத்துறை கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு சாமி சிலை ஒன்று அலையில் கரை ஒதுங்கியது. இதை பார்த்த பொதுமக்கள் சுசீந்திரம் போலீசாருக்கும், மதுசூதனபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரிக்கும் தகவல் கொடுத்தனர். கிராம நிர்வாக அதிகாரி பிரான்சிஸ் புரோஸ்கான், ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் கனிசெல்வி மற்றும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கடற்கரையில் கல்லால் செய்யப்பட்ட 5 அடி உயரமுள்ள சாமி சிலை கிடந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சிலையை மீட்டு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் சாமி சிலையை நேற்று கன்னியாகுமரியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story