சாக்கடை கால்வாயில் லாரி சிக்கியது


சாக்கடை கால்வாயில் லாரி சிக்கியது
x
தினத்தந்தி 29 April 2022 8:53 PM GMT (Updated: 2022-04-30T02:23:40+05:30)

சேலத்தில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, சாக்கடை கால்வாயில் சிக்கியது.

சேலம்:-
சேலம் தொங்கும் பூங்கா அருகில் இருந்து ரோட்டரி ஹால் வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. இந்தநிலையில், எல்லைப்பிடாரியம்மன் கோவில் எதிரில் உள்ள கட்டிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அதற்காக நேற்று மாலை ஒரு கனரக லாரியில் சிமெண்டு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. அப்போது, சாலையில் இருந்து வளாகத்திற்குள் பின்பக்கமாக சரக்குடன் லாரி வந்தபோது, பள்ளத்தில் இருந்த சாக்கடை கால்வாயில் லாரியின் டயர்கள் சிக்கிகொண்டன. இதனால் லாரியை தொடர்ந்து இயக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பிறகு லாரியில் இருந்த சிமெண்டு மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் பள்ளத்தில் சிக்கிய லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

Next Story