கூத்தம்பூண்டி சொக்கநாச்சி அம்மன் கோவில் குண்டம் விழா


கூத்தம்பூண்டி சொக்கநாச்சி அம்மன் கோவில் குண்டம் விழா
x
தினத்தந்தி 30 April 2022 2:40 AM IST (Updated: 30 April 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

கூத்தம்பூண்டி சொக்கநாச்சி அம்மன் கோவில் குண்டம் விழா நடைபெற்றது.

அந்தியூர் அருகே கூத்தம்பூண்டியில் பிரசித்தி பெற்ற சொக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 14-ந் தேதி கோவிலில் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவிலில் கம்பம் நடப்பட்டது. 
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 50 அடி நீளம் உள்ள குண்டம் தயார் செய்யப்பட்டது. குண்டத்துக்கு கோவில் பூசாரி சிறப்பு பூஜை செய்தார். இதையடுத்து கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கி தீ மிதித்தார். அவரை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களுடைய ேநர்த்திக்கடனை செலுத்தினர். 
பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடன்  குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய நிகழ்ச்சி அங்கு கூடியிருந்த மற்ற பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. பின்னர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பின்னர் மாலையில் கோவிலில் கம்பம் பிடுங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட  தேரில் சொக்கநாச்சி அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் பூசியும், மஞ்சள் கலந்த நீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றியும் விழாவை கொண்டாடினர். 

Next Story