பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 April 2022 9:14 PM GMT (Updated: 2022-04-30T02:44:58+05:30)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகாித்துள்ளது.

பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்குகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.  அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை       சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 214 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 80.49 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் குடிநீருக்காக வினாடிக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 1,000 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. 
நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 716 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 80.36 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடியும் திறக்கப்பட்டது.

Next Story