தினத்தந்தி புகாா் பெட்டி
பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி.
வீணாகும் குடிநீர்
ஈரோடு பெருந்துறை பழையபாளையம் பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோடை காலமான தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் குடிநீர் வீணாக வெளியேறி ரோட்டில் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பழையபாளையம்.
சாக்கடை வடிகால் வசதி
அந்தியூரை அடுத்த ஒட்டபாளையம் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பொதுமக்களால் நடந்து செல்ல முடியவில்லை. துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே செம்புளிச்சாம்பாளையத்தில் சாக்கடை வடிகால் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், செம்புளிச்சாம்பாளையம்.
சிலாப்புகள் சரியாக மூடப்படுமா?
கோபி திருமலை நகரின் முதல் வீதியில் குடிநீருக்காக குழி தோண்டப்பட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியை மூட சிலாப் போடப்பட்டுள்ளது. ஆனால் சிலாப்புகள் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதன் வழியாக அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் சென்று வருகிறார்கள். அவர்கள் தொட்டிக்குள் தவறி விழுந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்படலாம். உடனே தொட்டியை சரியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாதன், கோபி.
மின் விளக்கு எரியுமா?
கோபி பஸ் நிலையத்தில் சோடியம் மின் விளக்கு பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் அந்த விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் பஸ் நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் நிற்க அச்சப்படுகிறார்கள். எனவே சோடியம் மின் விளக்கு எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபி, பொதுமக்கள்.
குடிநீர் வேண்டும்
பவானி ஆண்டிகுளம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி பழைய காடையம்பட்டி. இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்காகவும், பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த பல நாட்களாக இந்த ஆழ்துளை கிணற்றில் குடிநீர் வரவில்லை. இதனால் பக்தர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றை சரி செய்து மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பழைய காடையம்பட்டி.
போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படுமா?
கோபிசெட்டிபாளையம் கல்லூரி பிரிவு பகுதியில் கலை கல்லூரி, அரசு மேல் நிலைப்பள்ளிக்கூடம், நடுநிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இதனால் இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் மாணவ- மாணவிகள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்படும். மேலும் அவர்கள் ரோட்டை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடராஜன், கோபி.
குடிநீர் திறப்பான் சரிசெய்யப்படுமா?
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் மைக்கேல்பாளையம் ஊராட்சி அலுவலகம் எதிரே ஊராட்சிக்கு வழங்கக்கூடிய குடிநீர் குழாய் உள்ளது. இதிலுள்ள குடிநீர் திறப்பான் (கேட்வால்வு) ரோட்டு ஓரத்தில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும்போது கேட்வால்வு மீது மோதினால் ஊராட்சிக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படும். உடனே குடிநீர் திறப்பானை பாதுகாப்பாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மைக்கேல்பாளையம்.
Related Tags :
Next Story