மரத்தில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை


மரத்தில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை
x
தினத்தந்தி 30 April 2022 4:01 AM IST (Updated: 30 April 2022 4:01 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மரத்தில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூரு: 

பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் மஞ்சுநாத் (வயது 44). இவர், நேற்று முன்தினம் சோழதேவனஹள்ளி அருகே யசருகட்டா பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மஞ்சுநாத் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருந்ததாக தெரிகிறது. 

இதனால் பணிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், குடும்பத்தினர் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது மஞ்சுநாத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story