பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தீ விபத்து: புகையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை


பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தீ விபத்து: புகையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை
x
தினத்தந்தி 30 April 2022 12:28 AM GMT (Updated: 30 April 2022 12:28 AM GMT)

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தீ விபத்து: புகையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் வளாகம் பெருங்குடியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கிருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை நேற்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புகையை கட்டுப்படுத்த 12 ஏக்கர் பரப்பளவில் மண் கொட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 ஏக்கர் நிலத்திலும் மண் கொட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நாளை (இன்று) முடிவடையும். இந்த புகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெருங்குடி, தரமணி, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story