மயிலாப்பூரில் டி.வி. பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து
மயிலாப்பூரில் டி.வி. பழுது பார்க்கும் கடையில் தீப்பிடித்து எரிந்தது.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் விசலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் அதே பகுதியில் டி.வி., ஏ.சி. போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு திடீரென இவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் கடையில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கடை முழுவதும் பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர், சைதாப்பேட்டை மற்றும் தியாகராயநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கடையில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story