மாதவரம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு - நண்பர்களுடன் குளித்தபோது சோகம்


மாதவரம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு - நண்பர்களுடன் குளித்தபோது சோகம்
x
தினத்தந்தி 30 April 2022 4:31 PM IST (Updated: 30 April 2022 4:31 PM IST)
t-max-icont-min-icon

நண்பர்களுடன் குளித்தபோது குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பிரதான சாலையை சேர்ந்தவர் ராமு. எலக்ட்ரீசியன். இவருடைய மகன் எழிலரசன்(வயது 10) இவன், அங்குள்ள பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் மாலை எழிலரசன், தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மாதவரம் அடுத்த பாலசுப்பிரமணியம் நகர் அருகே உள்ள ஒரு குட்டையில் குளிக்க சென்றார்.

நண்பர்கள் அனைவரும் குதூகலமாக குளித்து கொண்டிருந்தபோது எழிலரசன் திடீரென குட்டையில் இருந்த சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த சகநண்பர்கள், இதுபற்றி அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்குள் குட்டையில் மூழ்கி எழிலரசன் பலியாகி விட்டான். குட்டையில் மிதந்துகொண்டிருந்த அவனது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story