நர்சை பணி செய்ய விடாமல் தாக்கிய வாலிபர் கைது
கடம்பத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையத்தில் நர்சை பணி செய்ய விடாமல் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் ,
கடம்பத்தூரில் அரசு மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையம் உள்ளது. இங்கு கடம்பத்தூர் கசவநல்லூரை சேர்ந்த நாகராணி (வயது 37) என்பவர் நர்சாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த கடம்பத்தூர் இந்திரா நகரை சேர்ந்த சக்திவேல் (24) என்பவர் பணியில் இருந்த நாகராணியிடம் வீண் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டார். மேலும் அவர் நாகராணியை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டி தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.
மேலும் நோயாளிகளுக்கு கொடுக்க மேஜை மீது வைத்திருந்த மாத்திரையை எடுத்து அவர் முகத்தில் வீசி தாக்கிவிட்டு தப்பிச்சென்றார். இது குறித்து நாகராணி கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story