குளத்தில் ஆண் பிணம்
திருத்தணி முருகன் கோவிலுக்கு அருகில் உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான படசெட்டி அம்மன் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த குளத்தில் நேற்று முன்தினம் காலை அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கதக்க ஆண்பிணம் ஒன்று மிதப்பதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர் மொட்டை அடித்துவிட்டு குளிக்க செல்லும்போது குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது, கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரனை நடந்து வருகிறது. மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் இறந்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story