கழுகுமலையில் 3 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனவர் மீட்பு
கழுகுமலையில் 3 வருடங்களுக்கு முன்ப காணாமல் போனவரை போலீசார் மீட்டனர்.
கழுகுமலை:
கழுகுமலை முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த முத்துவேல் மகன் சின்னத்தம்பி (வயது 43). இவர் கடந்த 15-8-2018 அன்று காணாமல் போனதாக அவரது மனைவி கலா (39) கழுகுமலை போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்தம்பியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், காணாமல் போன சின்னத்தம்பி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு மனைவி கலாவிடம் ஒப்படைத்தனர். இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கழுகுமலை போலீசாரை பாராட்டினார்.
Related Tags :
Next Story