ஊட்டியில் சுற்றுப்பயணத்தை முடித்து கவர்னர் சென்னை திரும்பினார்
ஊட்டியில் சுற்றுப்பயணத்தை முடித்து கவர்னர் சென்னை திரும்பினார்.
ஊட்டி
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு வார சுற்றுப்பயணமாக கடந்த 23-ந் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். இதைத்தொடர்ந்து ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து 28-ந் தேதி முன்னாள் ராணுவத்தினருடன் கலந்துரையாடினார். இந்த நிலையில் சுற்றுப்பயணம் முடிந்து மீண்டும் சென்னை திரும்பினார்.
இதற்காக ஊட்டி ராஜ்பவன் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் சென்றார்.
அங்கு கவர்னருக்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்று வழியனுப்பினர். அங்கிருந்து மதியம் 3 மணிக்கு கவர்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். முன்னதாக ஊட்டி- கோத்தகிரி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story