ஊட்டியில் 1,000 கின்னீஸ் கோப்பைக்கான குதிரை பந்தயம்


ஊட்டியில் 1,000 கின்னீஸ் கோப்பைக்கான குதிரை பந்தயம்
x
தினத்தந்தி 30 April 2022 7:22 PM IST (Updated: 30 April 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் 1,000 கின்னீஸ் கோப்பைக்கான குதிரை பந்தயம் நேற்று நடந்தது. இதில் சீறிப்பாய்ந்து ஓடிய குதிரைகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

ஊட்டி

ஊட்டியில் 1,000 கின்னீஸ் கோப்பைக்கான குதிரை பந்தயம் நேற்று நடந்தது. இதில் சீறிப்பாய்ந்து ஓடிய குதிரைகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

1,000 கின்னீஸ் குதிரை பந்தயம்

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே கோடை சீசனில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இவர்களை கவர்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயங்கள் ஊட்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்த ஆண்டுக்கான புகழ்பெற்ற குதிரைப் பந்தயம் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தன்று தொடங்கியது. ஊட்டியில் நடக்கும் குதிரை பந்தயங்களில், 1,000, 2,000 கின்னீஸ், நீலகிரி தங்க கோப்பை, டர்பி ஆகியவை முக்கிய பந்தயங்களாகும். இந்தநிலையில், 5-வது நாள் குதிரை பந்தயம்  நடந்தது.

பரிசுக்கோப்பை

நேற்று மொத்தம் நடந்த, 8 பந்தயங்களில், 5-வது பந்தயம், 1,000 கின்னீஸ் பந்தயமாகும். அதில், 1,400 மீட்டர் துாரத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 8 குதிரைகள் பங்கேற்றன. இதில் ஆசாத் அஸ்பர் என்ற ஜாக்கி ஓட்டிய ரெமிடோ சாஸ்பிரிங் என்ற 5-ம் எண் கொண்ட குதிரை 1.31 நிமிடத்தில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தது. இந்த போட்டியை நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதை தொடர்ந்து 1,000 கின்னீஸ் கோப்பைக்கான பந்தயத்தில் வெற்றி பெற்ற ரெமிடோ சாஸ்பிரிங் என்ற குதிரையின் உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் ஜாக்கிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டன. முன்னதாக 4-வது பந்தயத்தின் போது வீரர் ஒருவர் போட்டி தூரத்தை கடந்ததும் குதிரையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மயங்கிக் கிடந்த வீரரை உடனடியாக சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story