சிதம்பரம் வாலிபர் வெட்டிக் கொலை


சிதம்பரம் வாலிபர் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 30 April 2022 7:50 PM IST (Updated: 30 April 2022 7:50 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே வாலிபரை வெட்டிக் கொலை செய்த மர்மநபர்கள், அவரது உடலை ஓடையில் வீசிச்சென்றனர்.

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே கண்ணங்குடி சுடுகாடு அருகில் உள்ள பாசிமுத்தான் ஓடையில் இன்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது தலை மற்றும் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தன. 
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இது பற்றி சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

வெட்டிக் கொலை 

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வாலிபரின் உடலை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அய்யப்பன்(வயது 23) என்பதும், 
இவர் கடந்த சில நாட்களாக கண்ணங்குடியில் உள்ள மாமா செல்லதுரை வீட்டில் இருந்து வந்ததும், நேற்று முன்தினம் இரவு அய்யப்பனை மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்து, உடலை பாசிமுத்தான் ஓடையில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. 

போலீசார் விசாரணை 

இதையடுத்து அய்யப்பனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கொலை செய்தது யார்?, எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
வாலிபரை கொலை செய்து உடலை ஓடையில் வீசிய சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story