கொக்கலாடி முத்துமாரியம்மன் கோவில் தீமிதி விழா


கொக்கலாடி முத்துமாரியம்மன் கோவில் தீமிதி விழா
x
தினத்தந்தி 30 April 2022 3:39 PM GMT (Updated: 30 April 2022 3:39 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி முத்துமாரியம்மன் கோவில் தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருத்துறைப்பூண்டி: 
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி முத்துமாரியம்மன் கோவில் தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 
முத்துமாரியம்மன் கோவில் 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். 
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், தீபாராதனையும்  நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது.  
தீமிதி திருவிழா 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் கோவிலின் எதிரே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். 
விழாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கோவில் அருகில் உள்ள குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.  விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story