பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?


பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
x
தினத்தந்தி 30 April 2022 9:16 PM IST (Updated: 30 April 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

வேதபுரம்-கெழுவத்தூர் இடையே நடந்து வரும் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டூர்:
வேதபுரம்-கெழுவத்தூர் இடையே நடந்து வரும் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பாலம் கட்டும் பணி 
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கோரைஆற்றில் சாளுவனாற்று தலைப்பில் வேதபுரம்-கெழுவத்தூர் இடையே ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பால பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த பால பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. 
திருத்துறைப்பூண்டி- பரவாக்கோட்டை சாலை உள்ளது. இந்த சாலை களப்பால், வேதபுரம், தென்பரை, திருமக்கோட்டை வழியாக பரவாக்கோட்டைக்கு செல்கிறது.  இந்த பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், வேதாரண்யம், கோடியக்கரை, நாகப்பட்டினம், நாகூர் ஆகிய பகுதிகளுக்கு எளிதாக சென்று வரக்கூடிய அளவில் இந்த வழித்தடம் அமைந்துள்ளது.
விைரந்து முடிக்க வேண்டும் 
மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள் பொதுமக்கள் ஆகியோருக்கு பயன் தரும்  வகையில் வேதாரண்யத்தில் இருந்து பரவாக்கோட்டை வரை இந்த வழித்தடத்தில் பஸ் வசதி செய்துகொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்களின்  நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேதபுரம் கடைத்தெருவில் இருந்து பாலம் கட்டும் இடம் வரை பழுதடைந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தார் சாலையாக மேம்படுத்தி போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். கோட்டூர் அருகே கோரை ஆற்றில் வேதபுரம்-கெழுவத்தூர் இடையே மந்தமாக நடந்து வரும் பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டு்ம் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story