நிலக்கரி பற்றாக்குறையால் நாடு இருளை நோக்கி செல்கிறது


நிலக்கரி பற்றாக்குறையால் நாடு இருளை நோக்கி செல்கிறது
x
தினத்தந்தி 30 April 2022 3:53 PM GMT (Updated: 2022-04-30T21:23:54+05:30)

நிலக்கரி பற்றாக்குறையால் நாடு இருளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என நாகையில், கே.எஸ். அழகிரி கூறினார்.

வெளிப்பாளையம்:
நிலக்கரி பற்றாக்குறையால் நாடு இருளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என நாகையில், கே.எஸ். அழகிரி கூறினார்.
பேட்டி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாகையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும். கடந்த 7 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர்.
நிலக்கரி பற்றாக்குறை
தற்போது இந்தியாவில் 8 மாநிலங்களில் நிலக்கரி ஒரு நாளைக்குத்தான் கையிருப்பு உள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால் 8 மாநிலங்களிலும் அனல்மின் நிலையங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. இதை சரிசெய்ய மாநில அரசுகளே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறுவது ஏற்புடையதல்ல. மாநில அரசுகளை பலவீனப்படுத்துவதற்காக மத்திய அரசு இதுபோல் கூறி வருகிறது.
நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுவதும் இருளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை சரி செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஆட்சியாளர்கள் பிரதமர் நரேந்திரமோடியை போன்று நடந்து கொண்டதால்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
---------


Next Story