சொகுசு பங்களாவில் திருடிய வேலைக்கார பெண் சிக்கினார்


சொகுசு பங்களாவில் திருடிய வேலைக்கார பெண் சிக்கினார்
x
தினத்தந்தி 30 April 2022 9:26 PM IST (Updated: 30 April 2022 9:26 PM IST)
t-max-icont-min-icon

சொகுசு பங்களாவில் திருடிய வேலைக்கார பெண் போலீசில் சிக்கினார்.

பெங்களூரு:

பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹூடி பகுதியில் ஒரு சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த சுமா(வயது 35) என்ற பெண் வேலை செய்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பங்களாவில் இருந்து தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டன. இதுகுறித்த புகாரின்பேரில் மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

  இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் சுமாவையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் நகைகள், வெள்ளி பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனால் அவரை கைது செய்த போலீசார் 213 கிராம் தங்கநகைகள், 692 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன்மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். சுமாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story