தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி


தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 30 April 2022 4:02 PM GMT (Updated: 2022-04-30T21:32:03+05:30)

நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

வெளிப்பாளையம்:
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீயணைப்புத் துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை மாவட்ட உதவி அலுவலர் துரை தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் சிவஞானம் முன்னிலை வகித்தார். இதில் ஆஸ்பத்திரிகளில் ஏற்படும் தீ விபத்துகளை எவ்வாறு தடுப்பது, விபத்தில் சிக்கி கொண்டவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும், தீத்தடுப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள்  செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
...

Next Story