தடுப்பு சுவர் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி


தடுப்பு சுவர் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 30 April 2022 4:52 PM GMT (Updated: 2022-04-30T22:22:42+05:30)

பள்ளிகொண்டா அருகே தடுப்பு சுவர் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி

அணைக்கட்டு

பெங்களூரு ராம் நகரை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மகன் கார்த்திக் (வயது 23), கும்பகோணத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றி வந்தார். 

இவரது நண்பர் பெங்களூரு மார்க் காலனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் (27). ஆரணியில் உள்ள கார்த்திக்கின் பாட்டியை பார்ப்பதற்காக 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பெங்களூருவில் இருந்து நேற்று  இரவு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கூத்தம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. 

இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கார்த்திக் இறந்துவிட்டதாக கூறினார்.

மேல்சிகிச்சைக்காக பார்த்திபன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story