செஞ்சி நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பதாகை வைக்க கூடாது பேரூராட்சி அறிவிப்பு


செஞ்சி நகரில்  பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பதாகை வைக்க கூடாது பேரூராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 30 April 2022 5:03 PM GMT (Updated: 2022-04-30T22:33:30+05:30)

செஞ்சி நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பதாகை வைக்க கூடாது என்று பேரூராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டது.


செஞ்சி, 

செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் டிஜிட்டல் பிரிண்ட் ஆப்செட் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு  பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பான்டைராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ராமலிங்கம் வரவேற்றார்.

கூட்டத்தில், அரசு அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடங்கள் உள்ள பகுதி, நகரின் பிரதான சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக விளம்பர பதாகைகளை வைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. 

 கூட்டத்தில் செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ரமேஷ், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story