நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 April 2022 10:34 PM IST (Updated: 30 April 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்:
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும்,  சுங்கச்சாவடி கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வினோதினி, வடக்கு மாவட்ட செயலாளர் இக்பால்தீன்,  திருவாரூர் தொகுதி செயலாளர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் பால்ராசு வரவேற்றார். முடிவில் மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story