போச்சம்பள்ளி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
போச்சம்பள்ளி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் முத்துபாண்டி (வயது 20). இவர் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்துள்ளார். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் மனமுடைந்த முத்துபாண்டி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story