கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது


கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 30 April 2022 11:36 PM IST (Updated: 30 April 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதுபோக விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும்.
இந்தநிலையில் நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்த அவர்கள் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
கடற்கரையில் திரண்டு உற்சாகம்
பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்வதற்காக படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். அதனை தொடர்ந்து காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கடற்கரை பகுதியில் உள்ள தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றையும்  பார்வையிட்டனர்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் திரண்டு உற்சாகமாக பொழுதை கழித்தனர். மாலை நேரத்தில் கடலின் இதமான காற்றை அனுபவித்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் வியாபாரமும் களை கட்டியது.
பயணிகள் கூட்டம் அதிகமாக வந்ததை தொடர்ந்து போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா பாதுகாவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story