தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மேற்கூரை வசதி தேவை
புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ரெயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து செல்லும் பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்களை ரெயில் நிலையத்தின் முன்பு நிறுத்தி செல்வது வழக்கம். இந்தநிலையில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை வசதி இல்லாததால் வாகனங்கள் வெயில் மற்றும் மழைகாலங்களில் பாதிப்படைந்து வருகிறது. எனவே இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ரோவர் வளைவு அருகே வரை சாலையின் இருபுறங்களில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
எரியாத மின்விளக்குகள்
அரியலூர் மாவட்டம், தேலூர் கிராமத்தில் உள்ள திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 13 மின்கம்பங்கள் உள்ளன. இதில் இரவு நேரங்களில் 5 மின்விளக்குகள் மட்டுமே எரிகிறது. 8 மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் இருட்டாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தேலூர், அரியலூர்.
சாலையோரத்தில் பள்ளம்
கரூர் மாவட்டம், நச்சலூர், நெய்தலூர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. தற்போது அந்த சாலைகின் இருபுறமும் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் இறங்கினால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும் எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நச்சலூர், கரூர்.
Related Tags :
Next Story