வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது


வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 April 2022 6:35 PM GMT (Updated: 2022-05-01T00:05:11+05:30)

ஆம்பூர் அருகே வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூர்

ஆம்பூர் டவுன் சாய்பாபா தெரு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 வீடுகளில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றது. 

இது தொடர்பான புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட வாணியம்பாடி பகுதியை சேர்ந்த நவீத் (வயது 27), ஆம்பூர் நியூ பெத்தலகேம் பகுதியை சேர்ந்த அசாருதீன் (28) ஆகிய 2 பேரை ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்தனர். 

மேலும் அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story