1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 30 April 2022 6:35 PM GMT (Updated: 2022-05-01T00:05:32+05:30)

வாணியம்பாடி அருகே 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி, குரிசிலாப்பட்டு அடுத்த பெரியார் நகர் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்பேரில் வேலூர் கோட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது ஒரு வீட்டின் பின்புறம் சுமார் 30 மூட்டைகளில் இருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை ஆந்திரா மாநிலத்திற்கு கடத்தி செல்ல மாடப்பள்ளியை சேர்ந்த அண்ணாமலை என்பவர் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து ரேஷன்அரிசியை கைப்பற்றிய குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார்,  தலைமறைவான அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வாணியம்பாடி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் அவர்கள் ஒப்படைத்தனர்.

Next Story