விவசாய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 30 April 2022 6:55 PM GMT (Updated: 30 April 2022 6:55 PM GMT)

விவசாய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நடந்தது.

நச்சலூர், 
குளித்தலை வட்டாரம் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பாக நங்கவரத்தில் உழவர் கடன் அட்டை, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், பிரதம மந்திரி நிதி உதவித் திட்டம் ஆகிய திட்டங்களை பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், நங்கவரம் துணை வேளாண் அலுவலர் கணேசன் கலந்து கொண்டு, உழவர் கடன் அட்டையின் அவசியம், நன்மைகள், கடன் பெறும் முறைகள், அதற்கு தேவையான ஆவணங்கள், இணைப்புகள், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் அவசியம், பயிர் காப்பீட்டு முறை பதிவு செய்யும் முறைகள், அதற்கான ஆவணங்கள், பயிர் காப்பீட்டு திட்டத்தின் நோக்கம், அதன் முறைகள் பற்றியும் பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் புதுப்பிக்க வேண்டும் என கூறினார். முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு திட்டங்களுக்கான துண்டு பிரசுரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நங்கவரம் உதவி வேளாண்மை அலுவலர் தனபால் செய்திருந்தார். முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் அருள்குமார் நன்றி கூறினார்.


Next Story