இளம்பெண்ணிடம் நகை பறித்த 4 பேர் கைது


இளம்பெண்ணிடம் நகை பறித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 April 2022 8:12 PM GMT (Updated: 2022-05-01T01:42:28+05:30)

இளம்பெண்ணிடம் நகை பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை தாழையூத்து அருகே தென்கலம் புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் நேற்று முன்தினம் நாரணம்மாள்புரம் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் திடீரென்று இளம்பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் செல்போனை பறித்தனர்.

இதுகுறித்து தாழையூத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வழிப்பறியில் ஈடுபட்டதாக தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், செல்வம், சீவலப்பேரியை சேர்ந்த வலதி மற்றும் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு வலதி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Next Story