ஊசி போட்டதில் சிறுமி சாவு: மருந்துக்கடை உரிமையாளர் கைது


ஊசி போட்டதில் சிறுமி சாவு: மருந்துக்கடை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 1 May 2022 1:58 AM IST (Updated: 1 May 2022 1:58 AM IST)
t-max-icont-min-icon

ஊசி போட்டதில் சிறுமி இறந்தது தொடர்பாக மருந்துக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பவுல். இவருடைய மகள் ஐடா (வயது 7). இவளுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவளை பெற்றோர் ஆலங்குளம்- துத்திகுளம் சாலையில் உள்ள மனோகரன் என்பவரது மருந்துக்கடைக்கு (மெடிக்கல்) அழைத்து சென்றனர். அங்கு சிறுமி ஐடாவுக்கு மனோகரன் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிதுநேரத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமிக்கு ஊசி போட்டதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. மேலும் மனோகரன் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல், முறைகேடாக ஊசி போட்டு சிகிச்சை அளித்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மருந்துக்கடை உரிமையாளரான மனோகரனை போலீசார் கைது செய்து, ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story