அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சாவு
ஒரத்தநாடு அருகே விபத்தில் படுகாயமடைந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உயிரிழந்தார்.
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே விபத்தில் படுகாயமடைந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உயிரிழந்தார்.
அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள உஞ்சியவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது67). இவர் திருவோணம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளராக பதவி வகித்து வந்தார். சம்பவத்தன்று சத்தியமூர்த்தி ஊரணிபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சத்தியமூர்த்தி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த சத்தியமூர்த்தி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
பரிதாப சாவு
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி நேற்று காலை இறந்தார். இது குறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தியமூர்த்தி மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story