ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு


ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
x
தினத்தந்தி 1 May 2022 2:17 AM IST (Updated: 1 May 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்.

கும்பகோணம்;
கும்பகோணம் அருகே தாராசுரம், எலும்மிச்சங்காபாளையம் மிஷன் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் அகிலன் (வயது22). இவர் நேற்று மதியம் தாராசுரம் சுந்தரபெருமாள் கோவில் இடையே ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற சோழன் விரைவு ரெயில் அகிலன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அகிலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அகிலனின் தாய் செந்தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில், கும்பகோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story