வாலிபர் கைது செல்போன்கள் பறிமுதல்


வாலிபர் கைது செல்போன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 May 2022 2:41 AM IST (Updated: 1 May 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகில் உள்ள கண்ணுகுடி கிராமத்தில் சம்பவத்தன்று இரவு வாலிபர் ஒருவர் அந்தப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருட முயன்றாா். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து பாப்பாநாடு போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த வீரமணி (வயது23) என்பதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு உதயசூரியபுரத்தில் நள்ளிரவில்  செல்போன் கடையை உடைத்து விலை உயர்ந்த செல்போன் திருடிய சம்பவத்தில் இந்த வாலிபருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்த வாட்டத்திக்கோட்டை போலீசார் வீரமணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story