முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு
மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவ-மாணவிகளுக்கான வரவேற்பு விழா நடந்தது.
மதுரை,
மதுரை மருத் துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான வரவேற்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டீன் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு, கல்லூரியில் படிக்கும் மூத்த மாணவ-மாணவிகள் பூக்கள், இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பேசியதாவது:-
கொரோனா உள்ளிட்ட எத்தனை புதுப்புது வைரஸ்கள் வந்தாலும், மக்களின் பாதுகாப்பு அரணாக இருப்பவர்கள் டாக்டர்கள். மதுரையில் கொரோனா பாதிப்பு தினமும் 1500-க்கும் அதிகமாக இருந்தபோது, வெளிநாடுகளில் இருந்த மதுரை மாணவர்கள் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க உதவினார்கள். அதன் மூலம் ஆக்சிஜன் தட்டுப்பாடு தீர்க்கப்பட்டது. ஏராளமான மக்களின் உயிர் தக்கசமயத்தில் காப்பாற்றப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தியதில் மதுரை மாவட்டம் முன்னோடியாக இருந்தது. அதற்கு டாக்டர்களின் ஒத்துழைப்பே காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதில் கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி, முதுநிலை விடுதிகாப்பாளர்கள் அழகவெங்கடேசன், செல்வராணி, மருத்துவ மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், பல்வேறு துறை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story