சத்தியமங்கலத்தில் விஷம் குடித்து ஆசிரியை தற்கொலை
சத்தியமங்கலத்தில் விஷம் குடித்து தனியார் பள்ளிக்கூட ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் விஷம் குடித்து தனியார் பள்ளிக்கூட ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆசிரியை
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயவேலு. மெக்கானிக். இவருடைய மனைவி கோகிலா (வயது 38). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிாியையாக பணியாற்றி வந்தார்.
கோகிலாவுக்கு உடல் நலம் சரியில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த 20 நாட்களாக சத்தியமங்கலம் பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள தன்னுடைய தாய் சண்முகவள்ளி வீட்டில் கோகிலா இருந்து வந்தார்.
விஷம் குடித்தார்
நேற்று முன்தினம் பள்ளிக்கூடத்துக்கு செல்வதாக தாய் சண்முகவள்ளியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்று உள்ளார். ஆனால் அவர் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் பண்ணாரி கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அம்மனை தரிசித்துவிட்டு அங்கிருந்து பஸ்சில் திரும்பி வரும்போது குளத்துப்பிரிவு என்ற இடத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின்னர் அவர் தான் கொண்டு வந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கோகிலா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story