பெருந்துறை அருகே சோகம் விஷம் குடித்து தாய்-தந்தை தற்கொலை; மகன் தகராறு செய்ததால் விபரீத முடிவு
பெருந்துறை அருகே மகன் தகராறு செய்ததால் விஷம் குடித்து தாய், தந்தை தற்கொலை செய்து கொண்டனர்.
பெருந்துறை
பெருந்துறை அருகே மகன் தகராறு செய்ததால் விஷம் குடித்து தாய், தந்தை தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே உள்ள குண்டுமல்லநாயக்கனூரை சேர்ந்தவர் சின்னகுப்பணன் (வயது 57). விவசாயி. இவருடைய மனைவி பொன்னம்மாள் (52). இவர்களுடைய மகன் தங்கராசு (35). கூலித்தொழிலாளி. தங்கராசுவுக்கு திருமணம் ஆகி மனைவியுடன் பெற்றோர் வீட்டின் அருகில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக தங்கராசுவை விட்டு அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது.
விஷம் குடித்தனர்
தங்கராசு தனது பெற்றோரிடம் அடிக்கடி தேவையில்லாமல் வாக்குவாதம் செய்து, சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் நேற்று முன்தினமும் தங்கராசு தனது பெற்றோரிடம் சண்டைபோட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார். தங்களை புரிந்து கொள்ளாமல், தேவையில்லாமல் மகன் இவ்வாறு சண்டையிடுகிறானே என சின்னகுப்பணன், பொன்னம்மாள் ஆகியோர் மிகவும் மனமுடைந்தனர். இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்த அவர்கள் 2 பேரும் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தனர்.
சாவு
உடனே அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னகுப்பணன், பொன்னம்மாள் ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவன்- மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story