கர்நாடகத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் கொரோனா பதிவு


கர்நாடகத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் கொரோனா பதிவு
x
தினத்தந்தி 1 May 2022 3:29 AM IST (Updated: 1 May 2022 3:29 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் கொரோனா உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 9 ஆயிரத்து 944 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடந்தது. இதில் புதிதாக 126 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெங்களூரு நகரில் 120 பேர், சிக்கமகளூருவில் 2 பேர், சித்ரதுர்கா, கலபுரகி, மைசூரு, உடுப்பியில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர். ஒரு மாதத்திற்கு பின்னர் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. வைரஸ் தொற்றுக்கு புதிதாக பெலகாவி, விஜயாப்புராவில் தலா ஒருவர் என 2 பேர் இறந்து உள்ளனர்.

  இதுவரை 39 லட்சத்து 47 ஆயிரத்து 622 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 59 பேர் இறந்து உள்ளனர். நேற்று 76 பேர் குணம் அடைந்தனர். 39 லட்சத்து 5 ஆயிரத்து 736 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 1,785 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 1.26 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.58 சதவீதமாகவும் உள்ளது.
  மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story