53 அடி உயர அடைக்கல அன்னை வெண்கல சொரூபம் திறப்பு


53 அடி உயர அடைக்கல அன்னை வெண்கல சொரூபம் திறப்பு
x
தினத்தந்தி 1 May 2022 4:05 AM IST (Updated: 1 May 2022 4:05 AM IST)
t-max-icont-min-icon

53 அடி உயர அடைக்கல அன்னை வெண்கல சொரூபம் திறக்கப்பட்டது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் இத்தாலியில் பிறந்து, தமிழகத்தில் வாழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல நூல்களை இயற்றிய வீரமாமுனிவர் கட்டிய ஆலயமாகும். கிறிஸ்தவ ஆலயங்களில் பழமை வாய்ந்த இந்த ஆலயம், தமிழ்நாடு சுற்றுலாத்தலங்களில் ஒன்றானதுமாகும். இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கிறிஸ்தவர்கள் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த ஆலயத்தில் உள்ள மாதா குளத்தில், புனித அடைக்கல அன்னைக்கு வெண்கல ெசாரூபம் அமைக்கும் பணி பக்தர்களின் ஆதரவோடு கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக பக்தர்களிடம் இருந்து 18 ஆயிரம் முதல் 19ஆயிரம் கிலோ வரையிலான வெண்கல பாத்திரங்கள் நன்கொடையாக சேகரிக்கப்பட்டது. அந்த பாத்திரங்களை உருக்கி, 18 ஆயிரம் கிலோ எடை கொண்ட உலகின் மிக உயரமான 53 அடி உயர மாதா சொரூபமாய் வார்க்கப்பட்டு, சிற்பி பிரவீன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த சொரூபம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

Next Story