விடுதி மேலாளர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
விடுதி மேலாளர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர் உள்பட மொத்தம் 11 பேரை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதான விடுதி உரிமையாளரான சித்துடையார் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி(45) மீது கடந்த மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய விடுதி மேலாளர் மணப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த தனவேல்(வயது 58), நாகமங்கலம் கருப்புசாமியின் மகன் பாலச்சந்திரன்(23) மற்றும் தஞ்சாவூர் கீழவாசல் பாம்பாட்டி தெருவை சேர்ந்த முருகேசன் மகன் வினோத்(29) ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவின் நகலை நேற்று ஜெயங்ெகாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி திருச்சி மத்திய சிறையில் வழங்கினார்.
Related Tags :
Next Story