அழகு நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை-உரிமையாளர் உள்பட 2 பேர் கைது


அழகு நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை-உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2022 4:34 AM IST (Updated: 1 May 2022 4:34 AM IST)
t-max-icont-min-icon

அழகு நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூரமங்கலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் சித்தேஷ் குமார் (வயது 40), இவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர், ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தான் வேலை பார்க்கும் அழகு நிலைய உரிமையாளரான சித்தேஷ் குமார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், ஆசைக்கு இணங்க மிரட்டியதாகவும், மேலும் இதற்கு உடந்தையாக அதே அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் புகழ் மங்கை என்ற பெண் ஊழியர் உள்ளார் என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தேஷ் குமார் மற்றும் புகழ் மங்கை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story