காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
கல்வராயன்மலையில் காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் கரியாலூர் அரசு மருத்துவமனை சார்பில் காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிமலை கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மருத்துவர் பிரபாகரன், ராஜேஷ், அருண்குமார், ஆஷா, ஆர்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் பொய்யாமொழி குமரன் தலைமையில் மருத்துவ குழுவினர் வெள்ளிமலை, கரியாலூர், குண்டியாநத்தம், மேல்பரிகம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று மலைவாழ் மக்களுக்கு காசநோய் தடுப்பு மற்றும் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கை, கால்களை தூய்மையாக வைத்துக் கொள்வது, கைகழுவுதல், உணவு உட்கொள்வது, சுற்றுச் சூழலை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story